பேருந்துகளை ஆய்வு செய்யாமல் தகுதி சான்றிதழ் வழங்கக்கூடாது

80பார்த்தது
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இன்று தகுதி சான்று பெறுவதற்காக வந்திருந்த சென்னை மாநகர அரசு
பேருந்து பிரேக் பிடிக்காமல் ஆங்காங்கே சில ஓட்டைகள் சரியாக சீரமைக்காமல் ஒட்டு வேலை பார்த்து கொண்டு வரப்படும் அரசுபேருந்துகளுக்கு அவசரகதியில் தகுதி சான்றிதழ்களை வழங்கி அனுப்புகின்றனர் இதன் காரணமாகவே பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி ஆங்காங்கே நின்று விடுவதுடன்
அதில் பயணம் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடுகிறது மழை பெய்து வரும் நிலையில் அரசு பேருந்துகளில் ஓட்டை காரணமாக மழை நீர் உள்ளே வருவதையும் முறையாக படிக்கட்டுகள் சீட்டுகள் ஜன்னல் கம்பிகள் கண்ணாடி போன்ற சீரமைக்கப்படாத அரசு பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்து தகுதி சான்று முறையாக வழங்க வேண்டும் இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
52வாகனங்களுக்கு தகுதி சான்றிதழை செங்குன்றம்
வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் போக்குவரத்து ஆய்வாளர் கருப்பையன் ஆகியோர் ரத்து செய்ததை போன்று பொது மக்களின் நலன் கருதி அரசு பேருந்துகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குறைபாடுகளை கொண்ட அரசு பேருந்துகளுக்கு தகுதி சான்றுகளை வழங்க கூடாது எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி