போரூர் சுங்கச்சாவடியில் இலவச பாஸ் கோரி போராட்டம்

75பார்த்தது
போரூர் சுங்கச்சாவடியில் இலவச பாஸ் கோரி போராட்டம்
போரூர் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாசிகளுக்கு இலவச பாஸ் வழங்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை போரூர் சுங்கச்சாவடியில் மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுங்கச்சாவடி அமைந்திருக்கும் பகுதிகளில் வசிக்கக்கூடிய உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சுங்கச்சாவடிகளில் பயணம் செய்யலாம் எனவும், உள்ளூர் வாசிகள் ஆதார் கார்டை காண்பித்தால் இலவச பாஸ் பெறலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அத்துடன் உள்ளூர் வாசிகளுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து நூதன முறையில் கவனத்தை ஈர்த்தனர். சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசி, அவர்களிடம் ஆதார் கார்டுகளை வாங்கி இலவச பாஸ்க்கு பதிலாக 50 சதவீத சலுகை கட்டணம் என்ற பாஸை வழங்கினார்கள். மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி இப்பொழுதுதான் நிறைவேறி உள்ளது எனவும்,   இந்த திட்டம் சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி