சென்னையில் பிஎம்டபுள்யூ சொகுசு கார் மோதி ராபிடோ ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மதுரவாயல்-தாம்பரம் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த பிஎம்டபுள்யூ கார், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பாண்டி பஜாரை சேர்ந்த பிரதீப் குமார் என்ற ராபிடோ ஊழியர் சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சொகுசு காரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய கார் ஓட்டுநரை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.