திருவொற்றியூர்: ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டவர் கைது

85பார்த்தது
திருவொற்றியூர்: ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டவர் கைது
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மகிமை ராஜ் (40) இவர் தனது instagram பக்கத்தில் பிற மதங்களை விமர்சித்தும் பிற சாதியினரை விமர்சித்தும் வீடியோ பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் குறித்து ஆபாசமாக பேசியும் காவல்துறை தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். போலீசாரை திட்டுவதும் அரசுகளை விமர்சிப்பதும் மத உணர்வை புண்படுத்துவதும் என கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்ட வீடியோக்களை தனது பக்கத்தில் இவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். இவர் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் காவல்துறையினரின் கவனத்திற்குச் சென்ற நிலையில் இவர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் இவரை நீதிமன்ற ஆஜருக்குப் பின் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி