17 வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.18.82 லட்சம் மதிப்பிலான பிரத்யேக மூன்று சக்கர பேட்டரி ஸ்கூட்டர்களை துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பேட்டரி ஸ்கூட்டர்களை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.