இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் செயல்வீரர் கூட்டம்

72பார்த்தது
இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் செயல்வீரர் கூட்டம்
மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆணைகிணங்க பூவிருந்தவல்லி, சுந்தர் திருமண மண்டபத்தில் 2024 திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட “இந்தியா” கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் செயல்வீரர்கூட்டம் மற்றும் திருவள்ளூர் மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் அறிமுகம் செய்தல் கூட்டத்தில் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் பங்கேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பார்வையாளர் திரு கிரிராஜன் MP, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு கிருஷ்ணசாமி MLA, திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட, திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சார்ந்த திமுக மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, CPI, CPM, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மைய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், திராவிடர் கழகம், கொ. ம. தே. க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் தலைமைக்கழக சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி