நெல்லை மத்திய மாவட்ட மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து இன்று நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி நெல்லை வந்தார் இந்த நிலையில் நெல்லை வந்த ராஜீவ் காந்தியை முன்னாள் மாநகராட்சி மேயர் சரவணன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.