நெல்லையில் இன்று (செப்.,6) நடைபெற்ற மதிமுக நிர்வாகி ஆறுமுக பாண்டியன் இல்ல விழாவில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆன்மீக வகுப்பு தவறானது. இது யாரால் அனுமதிக்கப்பட்டது. எதனால் நடந்தது என்ற விசாரணையை பள்ளிக்கல்வித்துறை நடத்த வேண்டும். சனாதன கருத்துக்களை அனுமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.