நெல்லை டவுணில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பான சூழல் நிலவுகிறது.