தமிழகத்தில் மாவட்டங்களில் அரசு பணிகளை திருத்தப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்தார். இந்நிலையில் திடீரென நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு இன்று கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அமைச்சர் கே என் நேரு நெல்லை மாவட்ட புதிய பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.