தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. நெல்லையில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளுக்கு வந்தனர். குறிப்பாக இன்றுடன் கடைசி நாள் என்பதால் டவுண் ரத வீதிகளில் மக்கள் பல்லாயிரம் பேர் கூடினர். புதுத்துணிகள் வாங்கி உற்சாகமுடன் நாளை தீபாவளி கொண்டாடுகின்றனர். டவுணில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.