ஆலங்குளம் அருகில் விபத்து: ஒருவர் பலி

1902பார்த்தது
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (24) தனது நண்பர்களான தங்கராஜ் உள்ளிட்ட 3 பேருடன் சேர்ந்து குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் சென்றார். குளித்துவிட்டு இன்று (09.06.2024) அதிகாலை ஆலங்குளம் மலைக்கோவில் அருகே வந்தபோது சாலையோரம் நின்ற லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி