நெல்லை பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் எம்சிஎஸ் நகரைச் சேர்ந்த 40 வயதான தமிழ்ச்செல்வன் என்பவரை அடையாளம் தெரியாத நாலு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். முன்விரோதத்தினால் இந்த அரிவாள் வெட்டு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். எனவே இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்ச்செல்வன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.