தந்தை மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை உறுதி: நீதிமன்றம் உத்தரவு!

54பார்த்தது
தந்தை மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை உறுதி: நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டி, முத்துசாமி புரத்தில் ரெங்கசாமி என்பவருக்குச் சொந்தமாக 45 சென்ட் இடம் உள்ளது. அவர் கடந்த 1993ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவருக்கு வாரிசு இல்லாததால் அவரது இடத்தை அவரின் உறவினரான சீனிசெல்வராஜ்(64) என்பவர் அபகரிக்க முயன்றுள்ளார்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில், சீனிசெல்வராஜ் மற்றும் அவரது மகன் லட்சுமண குமார் ஆகியோருக்கு 4 பிரிவுகளின் கீழ் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து சீனிசெல்வராஜ், லட்சுமணகுமார் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி உதயவேலன், ஏற்கெனவே மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி