தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை நேற்று மதன் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தமிழாசிரியரும் கவிஞருமான உமர் பாரூக் கண்டன வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.