திருநெல்வேலியில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10) மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் சந்தைப்பேட்டை அரசு ஆரம்ப பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் பாளை ஒன்றியம் சார்பாக இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்றனர். இந்த நிகழ்வின் பொழுது ஒன்றிய செயலாளர் ஆசத், கிளை துணை தலைவர் அமானுல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.