தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று (ஜூன் 9) நெல்லை மாவட்டத்தில் 226 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற தேர்வினை கல்லூரி முதல்வர் அப்துல் காதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.