திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் நாளை (நவம்பர் 25) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகவே கரிசல்பட்டி, பிள்ளை குளம், பத்தமடை, மேலச்செவல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.