திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை மண்பாண்ட கூட்டுறவு மையத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பெண்களுக்கான நவீன மண்பாண்ட தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் 300 ரூபாய் ஊக்கத் தொகையுடன் 30 பெண்கள் 30 நாள் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட நுண்கலை தயாரிப்புகள் குறித்து மைசூர் டிசைனர் ஆனந்தபாபு, முதுநிலை மண்பாண்ட கைவினை கலைஞர் ராஜகோபால் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இதில் பெண்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.