கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகள் இந்திய கொடி அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களையும் மூட வலியுறுத்தி, வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் அருகே காலிஸ்தானி பிரிவினைவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கொடியை அவமதித்தும், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தாக்கியும் காலிஸ்தானி பிரிவினைவாதிகள் அராஜகம் செய்துள்ளனர்.