திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி நம்பியாற்று வலையில் சுமார் 7 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று இன்று காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆப்தமித்ரா தன்னார்வலர் மர்ஹபா ஷேக் முகமத், எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி நகர செயலாளர் ஷேக் முகமது ஆகியோர் மலைப்பாம்பை மீட்டு திருக்குறுங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மலைப்பாம்பு பிடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.