தமிழ்நாட்டுக்கு வேட்பாளர் அறிவிப்பு இல்லை

60பார்த்தது
தமிழ்நாட்டுக்கு வேட்பாளர் அறிவிப்பு இல்லை
பாஜக தனது கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. பாஜக சார்பில் அண்ணாமலை தமிழகத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு பெயர் இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்தி