தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தாலுகா பல ஆண்டுகளாக பல விஷயங்களில் பின்தங்கி இருக்கிறது. இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல், நிலக்கோட்டை தாலுக்காக்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, பெரியகுளம் தாசில்தார் அரசின் அரசாணை பெற்ற பின்பு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என பதில் அளித்துள்ளார்.