சில வகை உணவுகளில் இயற்கையாகவே ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால் அவை குடலில் வாழும் கெட்ட புழுக்களை அழிக்க உதவுகின்றன. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை மிகுந்த பலனளிக்கும். கிராம்புகளில் உள்ள யூஜெனோல் குடலில் வாழும் கெட்ட புழுக்களை அழிக்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இஞ்சியை தேநீரில் கலந்து குடித்து வர செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.