விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது காழ்ப்புணர்வால் வன்மத்தை கக்குவோரை கடந்து செல்வோம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “விமர்சனங்கள் என்ற பெயரில் நம்மைப் பற்றி அப்பட்டமான அவதூறுகளைப் பரப்புகின்றனர். வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கக்குவது விமர்சனம் அல்ல, அவதூறு. எனது உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே, இந்த விமர்சனங்களை நாம் கடந்து செல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.