தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.