வடகொரியாவுக்கு ஒரு ஆப்பிரிக்க சிங்கம் மற்றும் இரண்டு கரடிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பரிசளித்துள்ளார். புடினுக்கு பரிசாக 2 செல்ல நாய்களை கிம் ஜாங் உன் திருப்பி அளித்துள்ளார். கிம்முக்கு புடின் ஏற்கனவே 24 குதிரைகளை பரிசாக அளித்திருந்தார். உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில், பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.