தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி யான ராமகிருஷ்ணன் இவரது தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கடந்த 14ஆம் தேதி ஆண்டிப்பட்டி போலீசார் இவரை கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு வேண்டாத சில நபர்களின் தூண்டுதலின் பேரில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பதாக மேக்கிழார்பட்டி கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட ராம கிருஷ்ணனை விடுவிக்க வேண்டும் என்றும் கள்ளசார்யாம் காய்ச்சியதாக பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மக்கள் மற்றும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களிடம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்த பின்பு தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.