கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா
கம்பம் ஒக்கலிகர் சமுதாயத்தின் சார்பாக பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இன்று பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய கலைஞர்களின் புலியாட்டம், பரதநாட்டியம், கதக்களி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு முன்னதாக நாட்டிய கலைஞர்கள், சமுதாயப் பொதுமக்கள் வாத்திய கருவிகள் முழங்க அம்மனை அலங்காரம் செய்து ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நகர் வலம் வந்தனர்.
நகர் பகுதியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்