பைக் தீ வைத்து எரிப்பு

557பார்த்தது
பைக் தீ வைத்து எரிப்பு
அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடசாமி. சொத்து பிரிப்பதில் இவரது அண்ணன் குடும்பத்திற்கும் இவருக்கும் முன்பகை இருந்து வந்த நிலையில் அண்ணனின் பேரன் அன்பீஸ்வரன் என்பவர் நேற்று திருவேங்கடசாமியிடம் மது போதையில் தகராறு செய்தார். அந்த இடத்தில் நிறுத்தி இருந்த திருவேங்கடசாமியின் டூவீலருக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடினார். திருவேங்கடசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி