தேனியை சேர்ந்த லாரி ஓட்டுநரான செல்லப்பாண்டி நேற்று (நவ. 16) பேவர் கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு தேனியிலிருந்து காமாட்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அழகாபுரி சென்ற போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.