திறந்த வெளி கழிப்பிடமாக இருந்த இடம் பூங்காவாக மாற்றம்

57பார்த்தது
திறந்த வெளி கழிப்பிடமாக இருந்த இடம் பூங்காவாக மாற்றம்
பெரியகுளத்தில் உள்ள மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் முயற்சியால் புதுப் பாலத்தை ஒட்டியுள்ள சாலையோர சிறுநீர் கழிப்பிடம் சாலையோர பூங்காவாக மாறியுள்ளது. அங்கு தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக இருந்த இடத்தை பூங்காவாக மாற்றி உள்ளனர். இதற்காக மக்கள் மன்றத்திற்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி