அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்சவம்

63பார்த்தது
அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்சவம்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜுன் 6) அமாவாசையை முன்னிட்டு தீர்த்த உற்சவம் நடைபெற்றது. இக்கோவிலில் இருந்து பல்லாக்கில் அஸ்தர தேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் முடிந்த பிறகு சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்சவம் நடந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி