தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்று மதுரை. 'தூங்கா நகரம்' என்று மதுரையை அழைக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஆன்மீக ரீதியாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மதுரையை ஆட்சி செய்பவள் மீனாட்சி. "கண் சிமிட்டாமல், தூங்காமல் நீரையே சுற்றி வரும் மீனைப்போல, மீனாட்சியும் தூங்காமல் ஊர்சுற்றி மக்களை காப்பாற்றுகிறாள், அதனால் தான் மதுரை தூங்கா நகரமாகியது" என்று மீனாட்சி தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.