கடைசி வரை நாட்டுக்காக வாழ்ந்து, திருமண பந்தத்தில் இணையாமல் இருந்தவர் அப்துல் கலாம். இதுபற்றி அவரிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது, “எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் என்பதோடு கூட்டுக் குடும்பமும் கூட. என் அண்ணனுக்கு ஒரு பேரன் இருக்கிறார். அந்த பேரனுக்கே ஒரு பேத்தி இருக்கிறார். அதாவது அண்ணனின் கொள்ளுப் பேத்தி. இவ்வளவு பெரிய குடும்பத்தில், நான் மட்டும் திருமணம் செய்யவில்லை என்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை” என பதிலளித்தார்.