பாம்புக்கும், கீரிக்கும் சண்டை நடக்கும் பொழுது, பாம்பிடம் கடிபடும் கீரி தனது உடலில் ஏற்பட்ட காயத்தை போக்குவதற்கு சிறியா நங்கை செடியின் மீது படுத்து புரண்டு நிவாரணம் பெறுமாம். அந்த அளவிற்கு பாம்பின் விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை சிறியா நங்கைக்கு உள்ளது. மேலும் இந்த செடியை வீட்டைச் சுற்றி வளர்க்கும் பொழுது அதன் வாசனைக்கு பயந்து பாம்புகள் உள்ளே வருவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறியா நங்கை செடிகளை விஷக்கடிகளுக்கு மருந்தாக கொடுக்கின்றனர்.