ஒன்று அரசியல் தெரிந்திருக்கணும். அல்லது நாட்டு நடப்பு புரிந்திருக்கணும். எதுவுமே தெரியாமல் இப்படி ஒரு எதிர்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார் என வருத்தமாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-ஐ சாடியுள்ளார். தமிழ் தமிழ் என சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்திக்கு முக்கியத்துவம் தருகிறார் என கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருந்தார்.