கோவை முத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் அன்பரசு (28). இவர் அப்பகுதியில் 44 வயது பெண் ஒருவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். நவ., 5ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் குளியலறையின் சுவரில் இருந்த ஓட்டை வழியாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். திடீரென இதனைக் கண்ட பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அங்கு ஓடிவந்த உறவினர்கள், அன்பரசுவை பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.