இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய போது துரிதமாக செயல்பட்ட ரஜத் என்ற இளைஞர் அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவினார். இந்த நிலையில் காதல் தோல்வியால் ரஜத்தும் அவர் காதலியும் விஷம் குடித்துள்ளனர். இதில் காதலி உயிரிழந்த நிலையில் ரஜத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.