மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியினை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கடலூர் கருங்குழி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் சார்பாக விவசாயிகளின் பயிர் சாகுபடி விவரங்கள் மற்றும் அரசின் மானியங்களை விரைந்து பெறும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணியினை நேற்று (நவ., 08) அமைச்சர் தொடங்கி வைத்தார்.