பெண்ணின் அனுமதியின்றி அவரின் வீட்டிற்குள் நுழைந்து டிவி பார்த்து கொண்டிருந்த ரியோடா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட முறை அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ள ரியோடா, போலி சாவிகளையும் தயாரித்து வைத்துள்ளார். அந்த பெண்ணின் வீடு சுத்தமாகவும், அழகாகவும் உள்ளதால் அடிக்கடி அங்கு வருவதாக விசாரணையில் அவர் தகவல். இதுமட்டுமன்றி கஃபேயில் பணிபுரியும் பெண்கள் பலரின் வீட்டிற்குள் நுழைவதை இவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.