திருப்பூர்: சேமலைகவுண்டன் பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் என 3 பேர் இன்று அதிகாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் கொலை செய்த கும்பல் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. காலையில் இது பற்றி அறிந்து கதறித் துடித்தபடி, செந்திலின் மனைவி, உறவினர்கள் ஓடி வந்த காட்சி காண்போரை நிலைகுலையச் செய்தது.