மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதால், சம்க்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு மாநில அரசே நிதியை விடுவித்துள்ளது. நிதி இல்லை என்றாலும் இருமொழிக் கொள்கை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.