பவன் கல்யாணிடம் தோற்று பெயரை மாற்றிக் கொண்ட வேட்பாளர்.!

58பார்த்தது
பவன் கல்யாணிடம் தோற்று பெயரை மாற்றிக் கொண்ட வேட்பாளர்.!
ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணை எதிர்த்து போட்டியிட்ட ஒஸ்எஸ்ஆர் வேட்பாளர், பவன் கல்யாணிடம் தோற்றால் பெயரை மாற்றிக் கொள்வேன் என சபதம் எடுத்திருந்தார். பிதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ்ஆர் கட்சியின் சார்பில் களமிறங்கிய முத்ரகடா பத்மநாபம், பவன் கல்யாணமிடம் தோற்று இருந்தார். எனவே தான் அளித்த வாக்குறுதியின் படி முத்ரகடா பத்மநாபம் என்கிற பெயரை பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொண்டுள்ளார். யாருடைய நெருக்கடியும் இல்லாமல், தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே பெயரை மாற்றிக் கொண்டதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி