முடி அடர்த்திக்கு உதவும் செம்பருத்தி பேக்.! எப்படி செய்வது?

58பார்த்தது
முடி அடர்த்திக்கு உதவும் செம்பருத்தி பேக்.! எப்படி செய்வது?
செம்பருத்தி பூவை பொடியாக்கி தலையில் பேக் போட்டு பயன்படுத்தி வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கு செம்பருத்தி மலர்கள் மற்றும் இலைகள் தேவை. பூக்கள் மற்றும் இலைகளை நன்கு கழுவி 1 - 2 நாள் வரை சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். பின்னர் அதை காற்று புகாத கண்ணாடி கொள்கலனில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்று முதல் நான்கு ஸ்பூன் வரை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து கெட்டியான கலவையாக செய்து, அதை தலைமுடியில் தடவ வேண்டும். 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த பேக் போட்டு வர முடி அடர்த்தியாக வளரும்.

தொடர்புடைய செய்தி