ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்விக் கல்லூரியின் மகளிர் விடுதியில் காதலியை சந்திக்க முயன்ற காதலன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவை சேர்ந்த இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், சர்ப்ரைஸாக காதலியை சந்திக்கலாம் என நினைத்து பர்தா அணிந்துகொண்டு விடுதிக்குள் சென்றுள்ளான். அவனது நடத்தையில் சந்தேகமடைந்த ஊழியர்கள் பிடித்து சோதித்ததில் ஆண் என தெரியவந்ததையடுத்து போலீசில் பிடித்துக்கொடுத்துள்ளனர்.