சாலையில் ஓடிய சிறுவன்.. இடித்து தூக்கிய பைக்

78பார்த்தது
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மஞ்சேஷ்வர் அருகே சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுவன், சாலையின் இருபக்கமும் கவனிக்காமல் கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, சிறுவன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி