18ஆவது நாடாளுமன்ற கூட்டம் இன்று கூடுகிறது

85பார்த்தது
18ஆவது நாடாளுமன்ற கூட்டம் இன்று கூடுகிறது
18-வது நாடாளுமன்ற கூட்டம் இன்று (ஜூன் 24) காலை கூடுகிறது. நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்பி-க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறும். புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து, காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தை முறைப்படி தொடங்கிவைப்பார்.

தொடர்புடைய செய்தி