சுவாமிமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது

66பார்த்தது
சுவாமிமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது



சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் கட்டளை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
கும்பகோணம் ஹோட்டல் சண்முகா சண்முகம் தலைமை வகித்தார். இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கும்பகோணம் சண்முகம் குடும்பத்தினர் அமுது வழங்கினர்.

தொடர்புடைய செய்தி