தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சிசிடிவி வைக்க ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சிசிடிவி வைக்க ஆர்ப்பாட்டம்
தஞ்சை பெரிய கோயில் வளாகம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சை பெரிய கோயிலை காண சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். பிரதோஷம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விழாக்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அளவில் குடிநீர் இல்லை. கட்டண கழிப்பிட வசதி இல்லை. திருவிழாக்காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் அதை கண்டுபிடிக்க போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. எனவே குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயில் வளா கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தொல்லியல் துறைக்கு வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி